0

சிறந்த 200 கம்பெனிகள்-ஆசியா-பசிபிக்


போர்பெர்ஸ் ஆசியா வணிக இதழ் ஆசியா-பசிபிக் நாடுகளின் முதல் 200 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் 35 கம்பெனிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பிடும்படியாக Exide பேட்டரி நிறுவனம் மற்றும் SRF கெமிகல் நிறுவனமும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர சீனாவின் 65 நிறுவனங்களும், பாகிஸ்தானின் வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனமான Millat Tractors நிறுவனமும், Nestol Technologies என்ற மென்பொருள் நிறுவனமும் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் நான்கு நிறுவங்கள் இதில் இடம்பெற்றுள்ளன, அவை ஆசியான் அல்லியான்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம், Ceylon Investments, Renuka Holdings, Bairaha Farms ஆகியனவாகும்.  
0

விசைத்தறிகள் வேலைநிறுத்தம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், நெசவு பணியில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில், விசைத்தறி உரிமையாளர்களும் இணைந்து கொண்டதால், இந்த இரண்டு மாவட்டங்களிலும் அனைத்து விசைத்தறிகளும் இயங்காமல் முடங்கின.
திருப்பூர் அதனை சுற்றியுள்ள பல்லடம், அவினாசி, மங்கலம், தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர், 63 வேலம்பாளையம் போன்ற பல்வேறு பகுதியில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கோவை மாவட்டத்தின் சோமனூர் பகுதியில் ஒரு  லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன.

தினமும் பனிரெண்டு மணிநேரம் வரை பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 180 முதல் 200 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படுகிறது. விசைத்தறி உரிமையாளர்களுக்கும், தொழிற்சங்களுக்கும் இடையேயான மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள உடன்பாடு செய்யப்படும். கடந்த இரு நாட்களாக நடைபெற்ற சம்பள உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆயிரக்கணக்கான விசைத்தறி கூடங்கள் இயங்கவில்லை. இந்நிலையில் இவர்களோடு கோவை மாவட்ட தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் சேர்ந்து கொண்டுள்ளதால் இரு மாவட்டங்களிலும் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது. 

இதுகுறித்து, விசைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது, விசைத்தறி தொழிலாளர்களுக்கு அடிப்படை செலவுகளை கூட நிறைவேற்ற முடியாத வகையில் ஊதியம் வழங்கபடுவதாகவும் இனி எட்டு மணிநேரத்திற்கு 300 முதல் 350 ரூபாய் வழங்க வேண்டும். இதற்கு ஒத்து வராததால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றனர்.

இதன் காரணமாக இவ்விரு  மாவட்டங்களிலும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பும், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 
0

தகிக்கும் தங்க விலை


              இன்றைய சந்தையில் தங்கத்தின் விலை ரூ.696 அதிகரித்து ரூ.20 ஆயிரத்து 896 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2612 என்ற அளவில் விற்கப்படுகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு, அமெரிக்க டாலரின் வீழ்ச்சி, சர்வதேச சந்தையில் தேவை அதிகரிப்பால் விலை உயர்வு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்தை கடந்தது.
இதனிடையே, அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்ததால் கடந்த 3 நாட்களாக தங்கம் விலையில் கடும் சரிவு ஏற்பட்டது.   கடந்த 25-ம்தேதி பவுனுக்கு ரூ.1360 குறைந்தது. பவுன் ரூ.19 ஆயிரத்து 432-க்கு விற்றது.
நேற்று ஒரே நாளில் மீண்டும் பவுனுக்கு ரூ.768 அதிகரித்தது. எனவே, ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 200 ஆக விற்றது.   இன்று மீண்டும் பவுனுக்கு ரூ.696 உயர்ந்து ரூ.20 ஆயிரத்து 896 ஆக உள்ளது. இதன் மூலம் ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்தை தொட்டது. ஒரு கிராம் ரூ.2612-க்கு விற்கிறது.
இதேபோல வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.62 ஆயிரத்து 805 ஆக இருந்தது. இன்று கிலோவுக்கு ரூ.1450 உயர்ந்து ரூ.64 ஆயிரத்து 255 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.68.75-க்கு விற்கப்படுகிறது.