விசைத்தறிகள் வேலைநிறுத்தம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், நெசவு பணியில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில், விசைத்தறி உரிமையாளர்களும் இணைந்து கொண்டதால், இந்த இரண்டு மாவட்டங்களிலும் அனைத்து விசைத்தறிகளும் இயங்காமல் முடங்கின.
திருப்பூர் அதனை சுற்றியுள்ள பல்லடம், அவினாசி, மங்கலம், தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர், 63 வேலம்பாளையம் போன்ற பல்வேறு பகுதியில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கோவை மாவட்டத்தின் சோமனூர் பகுதியில் ஒரு  லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன.

தினமும் பனிரெண்டு மணிநேரம் வரை பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 180 முதல் 200 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படுகிறது. விசைத்தறி உரிமையாளர்களுக்கும், தொழிற்சங்களுக்கும் இடையேயான மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள உடன்பாடு செய்யப்படும். கடந்த இரு நாட்களாக நடைபெற்ற சம்பள உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆயிரக்கணக்கான விசைத்தறி கூடங்கள் இயங்கவில்லை. இந்நிலையில் இவர்களோடு கோவை மாவட்ட தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் சேர்ந்து கொண்டுள்ளதால் இரு மாவட்டங்களிலும் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது. 

இதுகுறித்து, விசைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது, விசைத்தறி தொழிலாளர்களுக்கு அடிப்படை செலவுகளை கூட நிறைவேற்ற முடியாத வகையில் ஊதியம் வழங்கபடுவதாகவும் இனி எட்டு மணிநேரத்திற்கு 300 முதல் 350 ரூபாய் வழங்க வேண்டும். இதற்கு ஒத்து வராததால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றனர்.

இதன் காரணமாக இவ்விரு  மாவட்டங்களிலும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பும், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

0 comments: