தகிக்கும் தங்க விலை


              இன்றைய சந்தையில் தங்கத்தின் விலை ரூ.696 அதிகரித்து ரூ.20 ஆயிரத்து 896 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2612 என்ற அளவில் விற்கப்படுகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு, அமெரிக்க டாலரின் வீழ்ச்சி, சர்வதேச சந்தையில் தேவை அதிகரிப்பால் விலை உயர்வு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்தை கடந்தது.
இதனிடையே, அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்ததால் கடந்த 3 நாட்களாக தங்கம் விலையில் கடும் சரிவு ஏற்பட்டது.   கடந்த 25-ம்தேதி பவுனுக்கு ரூ.1360 குறைந்தது. பவுன் ரூ.19 ஆயிரத்து 432-க்கு விற்றது.
நேற்று ஒரே நாளில் மீண்டும் பவுனுக்கு ரூ.768 அதிகரித்தது. எனவே, ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 200 ஆக விற்றது.   இன்று மீண்டும் பவுனுக்கு ரூ.696 உயர்ந்து ரூ.20 ஆயிரத்து 896 ஆக உள்ளது. இதன் மூலம் ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்தை தொட்டது. ஒரு கிராம் ரூ.2612-க்கு விற்கிறது.
இதேபோல வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.62 ஆயிரத்து 805 ஆக இருந்தது. இன்று கிலோவுக்கு ரூ.1450 உயர்ந்து ரூ.64 ஆயிரத்து 255 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.68.75-க்கு விற்கப்படுகிறது.

0 comments: